ஹற்றன் கல்வித் திணைக்களக் கோட்டம் மூன்றில் அமைந்துள்ள மஸ்கெலியா பிறவுண்ஸ்விக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் அமைந்துள்ள தேசிய கல்லூரியின் நவீன இராயனகூடமும் ஆசிரியர் தங்கும் விடுதிகளும் அமைக்க பட்டு இன்று 12.10.2026 அன்று வைபவ ரீதியாக பாவனைக்கு ஒப்படைக்க பட்டது.


இந்த நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர ஆராச்சி, கிருஷ்ணன் கலைச் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விசேட அதிதிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க, கல்லூரியின் அதிபர் ஜோதிநாதன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா விசேட நிருபர்
