மலையகத்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சைக்குத் தோற்றினர்
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துப் பரீட்சை மத்திய நிலையங்களில் உயர் தர பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.
இன்று 10 ஆம் திகதி காலை 8 மணிக்கு நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் பாரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோன்றினர்.
குறிப்பாக ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பரீட்சை ஆரம்பமானது.
எவ்விதமான தங்கு தடையின்றி மிகவும் ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரீட்சைக்குத் தோற்றினர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை சற்று ஓய்ந்த போதிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
மேலும் சாமி மலை பகுதியில் இருந்தும் ஹட்டன் பகுதியில் இருந்தும் காலை வேளையில் சேவையில் ஈடு பட்டு வரும் அரச பேருந்துகள் இன்று சேவையில் இல்லாத நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்க பட்டனர்.
இந்த நிலையில் பரீட்சைக்குத் தோற்ற முச்சக்கர வண்டிகள் மூலம் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து வருகை தந்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நாளை முதல் சாமி மலை மஸ்கெலியா ஹட்டன் மஸ்கெலியா நல்லதண்ணி மஸ்கெலியா மறே மஸ்கெலியா காட்மோர் மஸ்கெலியா சாலையில் நாளாந்தம் சேவையில் ஈடு பட்டு வந்த பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்து தர கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
