மலைப்பகுதி இரயில் பாதையில் புனரமைப்புப் பணிகள் துரிதம்
தித்துவா புயலால் சேதமடைந்து சரிந்த கொட்டகலை இரயில் பாதையின் பகுதியைச் சீரமைக்கும் கட்டுமானப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


நிலச்சரிவினால் இரயில் பாதைப் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்து, மீண்டும் இரயில் இயக்கத்திற்கு ஏற்ற நிலைக்குப் பாதையைத் தயார் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். சுமார் எட்டு மாதங்களுக்குப் பின்னர் இந்தத் துரிதம் முன்னெடுக்கப்படுகிறது.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
