மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும் கௌரவிப்பும் நேற்றைய தினம் (23) பெருந்தோட்டம்,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்த ராஜா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பன்னீர்செல்வம், இலங்கை ஐயப்ப சுவாமிகளின் மகா சபையின் குருசுவாமி ரவீந்திரன் குரு சுவாமி, தமிழ்நாடு உலக தமிழர் சங்கம் சென்னை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலாநிதி இளங்கோவன், கொழும்பு செட்டியார்தெரு எவர் கிறீன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.



