தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) சித்தியடைந்து, மருத்துவத் துறைக்கு (Medical Faculty) நுழையத் தகுதி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இந்தப் பாராட்டு விழாவில்:
பிரபாகரன் கபிஷன் – தலவாக்கலை
சித்திரவேல் அனுஜா – கிரேட் வெஸ்டர்ன் (Great Western) தோட்ட வரலாற்றில் மருத்துவத் துறைக்குத் தகுதி பெற்ற முதல் மாணவி!
விஜயகுமார் அனிதா – லோகி (Logie) தோட்ட வரலாற்றில் இந்தச் சாதனையைப் படைத்த முதல் மாணவி ஆகியோரே கௌரவிக்கப்பட்டனர்.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வைத்தியர் ரெஷ்னி துரைராஜ், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே. சுதர்சன், லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்திக் கௌரவித்தனர்.
”தடைகளை உடைத்து, மலையகத்தில் இருந்து மருத்துவக் கனவை நனவாக்கியுள்ள இந்த மாணவர்கள், எமது சமூகத்திற்குப் பெரும் முன்னுதாரணம்!” எமது மண்ணின் இளம் மருத்துவப் போராளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று ஊர் மக்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மலைக்குருவியும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
கௌசல்யா












