புத்தாண்டு விருந்துக்காகச் சென்றவர்களின் முச்சக்கர வண்டியின் குறுக்கே நாய் பாய்ந்ததால் அந்த வண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (14) காலை இரத்தினபுரி, பட்டுகெதரை பகுதியில் இடம்பெற்றது.
சம்பவத்தில் தாயும் மகளும் காயமடைந்து இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாவனெல்ல பகுதியில் இருந்து பலாங்கொடையில் உள்ள தனது மூத்த மகளின் வீட்டுக்குப் புத்தாண்டுக்காக ஒரே குடும்பத்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி சென்றுகொண்டிருக்கும்போது வீதியின் குறுக்கே நாய் ஓடி வந்து பாய்ந்ததால் விபத்து நேர்ந்துள்ளது. எஸ். ஆர். இரவீந்திரன்
இவ்விபத்து இடம்பெற்ற வேளையில் இவ்வீதியில் வேறு வாகனங்கள் செல்லாத காரணத்தினால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது
இந்த முச்சக்கர வண்டியில் ஓரே குடும்பத்பத்தை சேர்ந்த தந்தை, தாய், அவர்களின் மகள்மார் இருவர் என நால்வர் பயணம் செய்துள்ளனர். தந்தையே வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.
முச்சக்கர வண்டி குடைசாய்ந்தவுடன் விபத்தில் சிக்கியவர்கள் கூக்குரல் இடவே பிரதேச மக்கள் சேர்ந்து இவர்களை மீட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இரத்தினபுரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்


