பனிப்பாறை சரிவதைப் படம்பிடித்த ட்ரோன் கமரா காட்சி வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் நேபாளத்திலும் திபெத்திலும் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கும் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்பிற்கும் காரணமான பனிப்பாறை சரிவு, ட்ரோன் (drone) கேமரா ஒன்றில் தற்செயலாகப் பதிவாகியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட அந்தப் பதிவில், கடல் மட்டத்திலிருந்து 7,200 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் (Langtang Lirung) சிகரத்திற்கு அருகிலுள்ள சரிவிலிருந்து, பாறை பனிப்பாறை ஆகியவற்றின் பிரம்மாண்டமான பகுதி ஒன்று உடைந்து விழுவது காணப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மலைப்பகுதியிலிருந்து பெரும் தூசுப் படலங்கள் எழுவதையும் காண முடிந்தது. நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது. 4500 பேர் காணாமற் போயிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
