தில்லியில் மாணவர் போராட்டத்திற்கு நடிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு தமிழ் உள்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேர்வு முறையில் சீர்திருத்தம் வேண்டி, நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற பேரணியில் இளைஞர்கள், மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க: கரப்பான் பூச்சியை நசுக்க இராணுவம் தயார் நிலையில்
நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் நடிகைகள் சபானா ஆஸ்மி, பூனம் பாண்டே, மலையாள நடிகைகள் ரஞ்சனி ஹரிதாஸ், ஷிஜா ரோஸ் ஆகியோர் ஜந்தர் மந்தரில் இளைஞர்களுடன் களத்தில் இருந்து அரசுக்கு எதிராகத் தங்கல் குரலைப் பதிவு செய்தனர்.
இதேபோன்று தென்னிந்திய நடிகர்கள் பலரும் தில்லியில் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
முறையாகத் தேர்வு நடத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தை ரேவதி பதிவு செய்துள்ளார்
