ஜூலை மாத அஸ்வெசுமை கொடுப்பனவு நாளை (31) வங்கியில் வைப்பிலிடப்படுகிறது.
2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசுமை’ முதியோர் கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக 3,494,810,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
பயனாளிகள் நாளை முதல் தங்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
