ஜப்பானில் பாரிய பூகம்பம் ஏற்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. றிக்டர் அளவில் 8 இற்கும் அதிக அளவில் பூகம்பம் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று (ஏப்ரல் 20, 2026) மாலை 4.53 அளவில் (இலங்கை நேரம் பிற்பகல் 1.23) ரிக்டர் அளவில் 7.4 முதல் 7.5 வரை பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 100 கி.மீ தொலைவில் உள்ள டோக்கியோ நகரத்திலும் உணரப்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 10 அடி உயரம் வரை சுனாமி அலை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு பாரிய பூகம்பம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
