கிங்டம் விஷன் வேதாகமக் கல்லூரி 2026 அக்டோபர் 13 ஆம் தேதி ஹற்றன் கிரீன் ஹில்ஸ் ரிட்ரீட் சென்டரில் உத்தியோகபு_ர்வமாகத் திறக்கப்பட்டது. விழா Rev. ஸ்டான்லி செல்வராஜ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, கிங்டம் விஷன் இலங்கையின் தலைவர் Rev. ஜோசப் ஸ்ரீ தரன் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக Dr. Ulf அவர்கள், விசேட விருந்தினர்களாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், திம்புள்ளை பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர்,பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அருகிலுள்ள ஹோட்டல்களின் மேலாளர்கள்,சமூக நண்பர்கள், ஆன்மீகத் தலைவர்கள், அதிபர், போதகர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
