மஸ்கெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸின் ஓட்டுநர் திடீரென பிறேக்கை அழுத்தியதால், மிதி பலகையில் இருந்த நடத்துநர் தூக்கி எறியப்பட்டுக் காயமடைந்த சம்பவம் இன்று (02) இடம்பெற்றது.
அவிசாவளை சாலைக்குச் சொந்தமான பஸ்ஸிலேயே இவ்வாறு நடந்துள்ளது.
காமடைந்த நடத்துநர் நாவலப்பிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகப் நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர். காயமுற்றவர் காமினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா நிருபர்
