மஸ்கெலியா பிறவுண்ஸ்விக் இராணி தோட்டத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
சிறுமி காணாமல் போயிருந்த போது அப் பகுதியில் உள்ள மவுசாக்கலை நீர்த் தேக்கப் பகுதியில் அவரின் பாதணிகள் கிடப்பதைக் கண்டு சந்தேகம் கொண்ட மக்கள் தேடியபோது சடலம் காணப்பட்டுள்ளது. அவர் நீர்த்தேக்கத்தில் பாய்நது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார சென்று நேரில் பார்வையிட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்
