இரத்தினபுரி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் அருட்தந்தை கிளீட்டஸ் சி. பெரேரா, OSB ஆண்டகை நித்திய ஜீவியமடைந்தார்
அன்னாரின் திருவுடல் திங்கட்கிழமை 24ஆம் திகதி மாலை 7.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி காலை 9.00 மணி வரை சீதுவை புனித மரியாள் ஆலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, திருவுடல் காலை 11.00 மணியளவில் அவிசாவளை, மடோலா பகுதியில் அமைந்துள்ள ஆயர் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அன்னாரின் இறுதித் திருப்பலிப்பூசை வியாழக்கிழமை 27ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அவிசாவளை, மடோலா ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள புனித ஜோசப் வாஸ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.
இறுதித் திருப்பலிப்பூசையைத் தொடர்ந்து, அன்னாரின் திருவுடல் இரத்தினபுரி புனித பேதுரு பவுல் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
எஸ். ஆர். இரவீந்திரன்
