இரத்தினபுரி சமன் தேவாலய வருடாந்த உற்சவம் இன்று (31) நிறைவடைந்தது.
இரத்தினபுரி வரலாற்றுச் சிறப்புமிக்க சபரகமுவை மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம், இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பித்து இன்று 31 ஆம் திகதி மாலை நீர்வெட்டுடன் முடிவடைந்தது.
801 ஆவது தடவையாக இந்த உற்சவம் அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெற்றது.
உற்சவத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்தொகையான மக்கள் தங்களது கலாசார உடையில் பங்குபற்றினர்.
ஊர்வலத்தின்போது கலை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மாணவர்களின் நடனங்கள்,யானைகளின் அணிவகுப்பு மனத்தைக் கவரும் கண் கொள்ளாக் காட்சியாகக் காணப்பட்டது.
எஸ். ஆர். இரவீந்திரன்


