பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, பாஸ்போட், காணி உரித்துச் சான்றிதழ் பெறுவதற்கான நடமாடும் சேவையொன்று மார்ச் 26 ஆம் திகதி காலை 8.30 முதல் மாலை 4.30 வரை அம்பகமுவை பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது.
தேசிய சமாதானப் பேரவையின் நுவரெலியா மாவட்டக் கிளையின் அனுசரணையுடன் அதன் அமைப்பாளர் இரேஷா உதேனி தலைமையில் இந்த நடமாடும் சேவை நடைபெறுகிறது.
இச் சேவையில் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவு, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு ஆகியவற்றில் உள்ள மக்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மஸ்கெலியா நிருபர்
