அக்கரபத்தனை சுவேதாவின் விடாமுயற்சிக்கு வெற்றி கைகூடியுள்ளது.
அக்கரப்பத்தனை சுவிநிதி அண்ணாதுரை (சுவேதா), இன்று சர்வதேச பல்கலைக்கழகப் பட்டதாரியாக உயர்ந்து தனது குடும்பத்திற்கும் ஆசிரியர்களுக்கும், அக்கரப்பத்தனை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற சுவேதா, புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்று, ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரியில் தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்தார்.
அங்கு இடைநிலைக் கல்வி, உயர்தரக் கல்வியைச் சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்த அவர், தனது எதிர்கால இலக்கை தெளிவாகத் தீர்மானித்து, SLIIT பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையைத் தனது உயர் கல்விக்காகத் தேர்ந்தெடுத்தார்.
தொடர்ச்சியான முயற்சி, அர்ப்பணிப்பு,விடாமுயற்சியின் பயனாக, Liverpool John Moores University (LJMU), லண்டன் வழங்கும் பட்டத்தை SLIIT பல்கலைக்கழகத்தின் மூலம் பெற்று, தனது கனவான உளவியல் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சுவேதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஒரு சாதாரண பாடசாலை வகுப்பறையில் ஆரம்பித்த கல்விப் பயணம், இன்று சர்வதேச பல்கலைக்கழகப் பட்டம் என்ற உயரத்தைத் தொட்டுள்ளது.
இது சுவேதாவின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; அவரை வழிநடத்திய பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள்,அக்கரப்பத்தனை மண்ணின் பெருமைமிகு சாதனையாகும்.
“வறுமை கனவுகளுக்கு தடையல்ல; விடாமுயற்சி இருந்தால் உயரங்களைத் தொடலாம்” என்பதற்கு சுவேதாவின் கல்விப் பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கௌசல்யா
