கொட்டகலை பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (18) சிறப்பாக நடைபெற்றன.
பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபை முன்னெடுக்கும் உள்ளூராட்சி வாரத்தின் ஐந்தாம் நாளான (18.09.2026) இன்று ‘இலக்கியம்,கல்வி, நூலகம், விளையாட்டு தினம்’ எனும் கருப்பொருளின் கீழ்,பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.






முன்பள்ளி மாணவர்களுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி,சித்திரக் கண்காட்சி ஆகியன நடைபெற்றன.மேலும், விளையாட்டுத் தினத்தையொட்டி கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான விஸ்வநாதன், நந்தகோபால் பாஸ்கரன், பொன்னையா ரவிச்சந்திரன், சுரேஷ், கணபதி கண்ணதாசன், சுப்பையா மகேந்திரன், அமித்த, நேசமலர், ரசிகா ஜீவனி, ராஜேந்திரன், சுதர்சன், செயலாளர் சிவராம் ராஜவீரன் ஆகியோருடன் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
