கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை!

கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை!

தோட்டத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதையில் பயணிக்கக் கூடாது என்று கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை! பற்றிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள கணக்கப்பிள்ளையே இவ்வாறு அக்கிரமம் புரிந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பாதை மூடப்பட்டதால், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பயணிகள், முதியோர்கள், நோயாளிகள் பாரிய அசெகரியங்களை எதிர்நோக்குகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகப் பாவனையில் இருந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் மூடியதால், சுமார் பத்து நிமிடத்தில் செல்லும் தூரத்தை இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது எனவே, கடந்த காலங்களில் இருந்தது போல் குறுக்கு வீதியைத் திறந்து உதவ வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இராஜமலை பிரிவில் வெளிக்கள உத்தியோகத்தர் (கணக்கப்பிள்ளை) ஒருவரே…

தெமோதரை பாலம் கவர்ச்சிக்கு மாறுகிறது

தெமோதரை பாலம் கவர்ச்சிக்கு மாறுகிறது

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொப்பித்தோட்டம் தங்கா

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை! எங்களுக்கே உண்டு என்று சொல்வதைப்போல அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எதிரணி உறுப்பினர் ஹேக்டர் அப்புபுஹாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு அமைச்சர் தமிழில் பதில் அளித்திருக்கிறார். அதனைக் கேட்டு உரைபெயர்ப்பாளர் எப்படி பெயர்த்தாரோ தெரியவில்லை, தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றும் பதிலை சபையில் சமர்ப்பியுங்கள் நான் பெற்றுக்கொள்கிறேன் என்றும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில்தான் சற்றுக் குழப்பம். அமைச்சர் தமிழில் சொன்ன விளக்கம், உரை பெயர்த்தவருக்குப் புரியவில்லையா, அல்லது அமைச்சர் தனது தனித்துவத் தமிழில் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமற்போனதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இங்கு ஒரு விடயத்தைச் சொல்லியாக வேண்டும். அமைச்சர் சொல்கிறார் எனது தாய்மொழி தமிழ். நான் தமிழில்தான் பதில் அளிப்பேன் என்று. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. மொழி என்பது…

மருதமடு அன்னையின் ஆடித்திருவிழா நிறைவு

மருதமடு அன்னையின் ஆடித்திருவிழா நிறைவு

மருதமடு அன்னையின் திருச்சொருப ஆசீருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று நிறைவடைந்திருக்கிறது. திருவிழாத் திருப்பலி காலை 6.15 இற்குத் தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், குருநாகல் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஹெரல்ட் அன்ரனி பெரேரா, ஒய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள். திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது. திருச்சொரூப பவனியின் நிறைவில் பக்த அடியார்களுக்கு மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டுத் திருவிழா நிறைவடைந்தது. மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆடித்திருவிழா கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜோசப் பெர்னாண்டோ, மன்னார்

200 வருடம் வாழ்ந்தும் நிலவுரிமை இல்லையா? முட்டாள் அரசியல்!

200 வருடம் வாழ்ந்தும் நிலவுரிமை இல்லையா?

இந்தியாவிலிருந்து பிழைப்பு தேடி இலங்கையின் மலைப் பிரதேசங்களுக்குத் தமிழர்கள் வந்து 200 வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொல்பவர்களிடம், 200 வருடம் வாழ்ந்தும் நிலவுரிமை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது. அப்படியோர் அரசியல் செய்வார்களாயின் அது முட்டாள்தனமாக அரசியல் இல்லையா? என்றும் கேட்கத் தோன்றவில்லையா? மேற்கத்தேய நாடுகளில் ஐந்து வருடம் குடியிருந்தால், குடியுரிமை வழங்குகிறார்கள். இங்குக் காணிச் சட்டத்தில் 66ஆம் சரத்தின்படி ஒருவர் ஒரு காணியில் 66 நாட்கள் இருந்துவிட்டால், அவருக்கு அந்தக் காணியைச் சொந்தம் கொண்டாட முடியம். வீடு, மரம் உள்ளிட்ட அசையாச் கொத்துகள் இருந்தால் அது இன்னும் கூடுதல் பலம்! வாடகை வீட்டைச் சொந்மாக்கிக்கொண்ட பலர் இங்குதான் வாழ்கிறார்கள் அப்படியென்றால், 200 வருடங்களாக வாழும் ஓர் இடத்தில் இன்னும் உரிமை இல்லை என்று சொல்லிக் கோசம் எழுப்புவது வெட்கம் கெட்ட அரசியல் இலலையா? மலையகம் எங்கள் தேசம்,…

வடக்கில் மே 29இல் போராட்டம்

வடக்கில் மே 29இல் போராட்டம்

வடக்கில் மே 29இல் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க மே 28 வரை காலக்கெடு கொடுத்துள்ள சுமந்திரன், தவறினால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று மாலை ஊடகச் சந்திப்பை நடத்தி அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால், வடக்கில் மே 29இல் போராட்டம் ஆரம்பமாகும். அந்தப் போராட்டம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு முன்னெடுக்கப்படும். வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பல தடைவைகள் இடம்பெயர்ந்த…

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு முத்தேர் திருவிழா மேளதாள இசை முழங்க, பக்த அடியார்களின் அரோகரா பக்தி பரவசத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேர் பவனி ஆலயத்தில் நடைபெற்ற திரவிய அபிசேகம் வசந்த மண்டப பூஜை உள் வீதி உலா வருதல் ஆகியன இடம்பெற்று தேர் திருவிழா ஆரம்பமானது. இந்தத் தேர் பவனி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி ஹட்டன் புறநகர் வழியாக எம்.ஆர்.டவுன் வரை சென்று பிரதான வீதியூடாக இன்று ஆலயத்தினை வந்தடைந்தது. கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்திரா பௌரணமி தேர் திருவிழா, நேற்று முன்தினம் கங்கை நீர்…

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்: மாகோவுக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான தண்டவாளப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் (28) கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது. ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதால் அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய, இந்தியாவின் பரிசாக 22 ரயில் இயந்திரங்கள்

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி

ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம்

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி வடக்கு ரயில் மார்க்கத்தின் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. றாளை திங்கட்கிழமை யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே ரயில் சேவையில் ஈடுபடுகிறது. நாளை முதல் மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குப் பெண்களிடம் வாக்கு கேட்பதற்கு எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது என அக்கட்சியின் கொழும்புக்கிளை முன்னாள் செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது. அப்போது மிதிலா ஶ்ரீபத்மநாதன் கருத்து தெரிவித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குள் இந்த விடயமாகப் பல நாள் குரல் எழுப்பியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாற்றம் என்பது பெண்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பெண்களில் மாற்றம் இல்லாது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. சமூகத்தில் மாற்றம் இல்லாது எதனையும் செய்ய முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பு மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதே போல தான் சமூகமும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்…