விமான சாகசத்தைப் பார்க்க வந்தவர் உயிரிழப்பு

சென்னையில் விமான சாகசம்

சென்னையில் விமான சாகசத்தைப் பார்கக் வந்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்துள்ளார். சாகசத்தைப் பார்வையிட வந்திருந்த பொதுமக்கள் பலர் வெப்பம் தாளாமல் மயங்கி வீழந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அதில் 56 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்திய விமானப் படை 92 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்தனர்.சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் தொடங்கின. இதை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் கண்டுகளித்தனர். மெரினாவில் பொதுமக்கள் இதைக் கண்டுகளிக்க 15க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு…

இந்தியாவின் பரிசாக 22 ரயில் இயந்திரங்கள்

இந்தியா இலங்கைக்கு 22 ரயில் இயந்திரங்களைப் பரிசாக வழங்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி காங்கேசந்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

கலாநிதி ஜெய்சங்கர்- ரணில் சந்திப்பு

ஜெய்சங்கர் ரணில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். புதிய அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுவதாக தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர்கள்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (04) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது இராஜதந்திரி இவர்.