பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் மதன் பாப், தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர். இசையமைப்பாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கிய மதன் பாப், பின்னாளில், குணச்சித்திர நடிப்பில் முத்திரைப் பதித்தவர் இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில், உடல் நலக்குறைவால், நடிகர் மதன் பாப் காலமானார். மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி இவருக்கு சுசிலா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப், அதற்காக சிகிச்சை பெற்று மீண்டதாக கூறப்படும் நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
Category: இந்தியா
கமல் ஹாசன் எம்பியாக சத்தியப்பிரமாணம்
நடிகர் கமல் ஹாசன் எம்பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவருடன் மேலும் திமுக உறுப்பினர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். 2024 சட்ட சபைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்தமைக்காக அவருக்கு மேல் சபையில் உறுப்பினர் பதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. பார்த்தசாரதி ஶ்ரீனிவாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் கமல் ஹாசன் 1954 நவம்பர் ஏழாந்திகதி பிறந்தவர். 70 வயதான அவர் தேசிய அரசியலில் முதற்தடவையாகப் பிரவேசிக்கின்றார். திரு. கமல் ஹாசன் தமிழ் மொழியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதையடுத்து அவரது மகள் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர். இன்று பதவியேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது
யேமனில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது, அவரைத் தூக்கிலிடுவது ஒன்றே தமக்குத் தேவை என்று நிமிஷாவால் கொலையுண்டதாகக் கூறப்படுபவரின் சகோதரர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தனது சகோதரனுக்கான இழப்பீட்டையோ வேறு எந்த நிவாரணத்தையோ பெறுவதற்குத் தமது குடும்பத்தவர்கள் தயாராக இல்லை என்று கொலையுண்டவரின் சகோதரரான அப்துல் பத்தா மஹதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பேஸ்புக் பக்கத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஒன்மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. பிரியாவுக்கான மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது எமக்குத் தெரியாது. எவ்வாறேனும் அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் எமக்குக் கிடையாது. இதுவிடயத்தில் எந்தவித நல்லிணக்கத்திற்கோ சமரசத்திற்கோ இடம் கிடையாது. சிறிது கால இடைவெளி வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், மரண தண்டனை என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று அப்துல் பத்தா…
முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய்
முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயைத் தெரிவு செய்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை, பனைவூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், இன்று (04) தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி அல்லது மதுரையில் 2ஆவது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் ஆரம்பம்
சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் ஆரம்பம் உற்சாகமாக நடைபெற்றது. விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இந்திய வரலாற்றில் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது நபராவார். அவர், புதன்கிழமை (ஜூன் 25) அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபேல்கன் 9 விண்கலத்தில் விண்வெளிக்குப் புறப்பட்டார். அவரின் சாதனையை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர். சுபான்ஷு சுக்லா லக்னோவில் பிறந்து உத்தரப் பிரதேசத்தின் அல்காஞ்ச் நகரின் சிட்டி மான்டிசோரி பள்ளியில் கல்வி பயின்றவர். அவர் ஈடுபட்டுள்ள ஏக்சியொம் 4 விண்வெளிப் பயணத்தின்போது விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டது நேரடியாக ஒளிபரப்பானதைக் கண்டு மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். குழுத் தலைவர் கேப்டன் சுக்லாவுக்கு முன்பு, 1984ஆம் ஆண்டில்தான் மற்றோர் இந்தியரான ராக்கேஷ் சுக்லா விண்வெளிக்குச் சென்றார். மேலும், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப்…
ஏர் இந்தியா முன்பதிவில் விழ்ச்சி
ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மொத்தமாக 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சர்வதேச முன்பதிவுகள் ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும், உள்ளூர் பயணத்திற்கான முன்பதிவுகள் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் குறைந்துள்ளது. அதேபோல் உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணமும் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவுகள்…
ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு
ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு விமானம் வியாழக்கிழமையன்று (ஜூன் 19) அதிகாலை டெல்லி வந்தடைந்தது. மாணவர்களைக் கண்டதும் அவர்களின் பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சுடனும் கண்ணீருடனும் வரவேற்றனர். மீட்கப்பட்டவர்களில் 90 மாணவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் உள்ள மற்ற மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல், ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய…
இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று ‘ஜி7’ உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள கனடா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி. அங்கு பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அண்மைகாலமாக இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட கசப்புணர்வு மறைந்து, புதிய தொடக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா பிரதமருடனான சந்திப்பு அருமையாக இருந்ததாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. “இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன. நானும் பிரதமர் கார்னியும் இணைந்து இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்ப்போம்,” என்றும் பிரதமர் மோடி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி-கொழும்பு சரக்குக் கப்பல்
தூத்துக்குடி-கொழும்பு சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு தினசரி சரக்கு படகு போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல சுமாா் 25 படகுகள் இயக்கப்படுகின்றன. இதில், சுமாா் 250 முதல் 400 டன்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் படகுகள் உள்ளன. இந்த பாரம்பரிய படகு தொழிலை நம்பி தூத்துக்குடியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனா். தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் படகு மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருள்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுவாக படகு போக்குவரத்து கடல் வானிலையைக்…
ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகும் இந்தியா!
ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகும் இந்தியா!: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப் படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் திகதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் திகதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம்…