மஸ்கெலியா பிரதேச சபையில் உள்ளூராட்சி வார நிகழ்ச்சிகள் ஆரம்பம்!
பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் தலைமையில் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை முன்னெடுக்கப்படும் ‘உள்ளூராட்சி வாரத்தின்’ ஆரம்ப நாள் நிகழ்ச்சி, இன்றைய தினம் (செப்டம்பர் 14) மஸ்கெலியா DMD கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு நிலுவைப் பணம் வழங்கப்பட்டுப் பதிவு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, மஸ்கெலியா சந்தைத் தொகுதி கடைக் கூலியும் பெற்றுகொள்ளப்பட்டது.
நிகழ்வின் தொடர்ச்சியாக, 2026-ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரம் மஸ்கெலியா பிரதேச சபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
