அரச ஆஸ்பத்திரிகளில் 4600 தாதியர் தொழிலில் இருந்து விலகியிருப்பதாகத் தகல் வெளியாகியுள்ளது.
அரச ஆஸ்பத்திரிகளில் நிலவும் கடமை அழுத்தம், பணிச்சுமை தாளாமல் சுமார் 4600 தாதியர்கள் பணியிலிருந்து விலகிச் சென்றிருப்பதாக அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்தினபிரியா தெரிவித்துள்ளார்.
நாடு திவாலானதன் பின்னர் விடுமுறையில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சுமார் 2000 தாதியர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் அவர்கள் தொழிலைக் கைவிட்டுச் செல்வதாகத் திரு. ரத்தினபிரியா தெரிவித்துள்ளார்.
