நக்கிள்ஸ் அருவியில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
கண்டி – பன்விலை, நக்கிள்ஸ் பிரதேசத்திலுள்ள பம்பரல்லை அருவியில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் கற்பாறையிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
13 வயது,14 வயது மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இரட்ணாயக்க தெரிவித்தார்.
நக்கிள்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள் கற்பாறையிலிருந்து புகைப்படம் எடுக்க முயற்சித்த போதே தவறி கீழே வீழ்ந்து, தலையில் காயமடைந்து உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 14 வயதான சஞ்சன், மடுல்கலை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையும் வாசிக்கலாம்: நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ வீழ்ந்ததில் இருவர் பலி
மற்றைய 13 வயதான கிருஷ்ண மூர்த்தி டிரோன்,கட்டுகஸ்தோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது வழியில் உயிரிழந்துள்ளார்.
நண்பர்கள் ஐவர் நேற்று புதன் (22) மாலை பன்விலை நக்கிள்ஸ் பம்பரல்லை அருவிப் பகுதிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்பொது மாணவர்கள் இருவர் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
