மத்திய அதிவேக நெடுஞ்சாலை கண்ணொருவை வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்துத் தறை அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்டுமானப் பணிகளை கண்ணொருவை வரை நீடிக்கும் திட்டத்துடனேயே கலகெதரை பகுதியில் நிறைவு செய்ய அரசாங்கம் எண்ணுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: நுவரெலியா பஸ் நிலையத்தில் ஆற்றில் வீழ்ந்த பஸ்
பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்தின எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், கண்டி நகரில் மேலும் பல வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், சேதமடைந்த கொழும்பு – கண்டி மலையக பிரதான ரயில் பாதையின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
