நுவரெலியா பஸ் நிலையத்தில் ஆற்றில் வீழ்ந்த பஸ்ஸை மீட்க ஊழியர்கள் பிரயத்தனப்பட்டனர்.
தித்துவா புயலுக்கு முன்னர் வெள்ளப் பெருக்கில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் அமைந்திருந்த பகுதியில் இன்று (08) இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்தது.
பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்திவைப்பதற்காக பஸ்ஸை ஓட்டுநர் பின்னோக்கிச் செலுத்தியபோதே பஸ் ஆற்றில் வீழ்ந்தது.
நுவரெலியா மாநகரின் கேந்திர முக்கியத்துவமிக்க பகுதியில் அமைந்துள்ள இந்த பஸ் நிலையத்திற்குச் செல்லும் மக்கள், இந்த ஆற்றை ஊடறுத்த அமைந்திருந்த பாலத்தின் வழயையே பயன்படுத்தி வந்தனர்.
மாவட்டச் செயலகம், நீதிமன்றம் முதலான முக்கிய இடங்களுக்குச் செல்வதானால், பஸ்ஸில் இறங்கிப் பெரிய சுற்று சுற்றியே செல்ல வேண்டும்.


இந்தப் பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுப் பல மாதங்களாகியும் இன்னமும் மீளமைக்கப்படவில்லை.
அதனால், பொதுமக்கள் ஒரு தற்காலிக வழியை ஏற்படுத்தி, பஸ் நிலையத்திலிருற்து பாதையை மாறிக்கொண்டிருந்தனர்.
இப்போது நுவரெலியா பஸ் நிலையத்தில் அந்த இடத்தில்தான் இன்று பஸ்ஸுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்துக் கவனம் செலுத்தமாட்டார்களா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கெளசல்யா
பஸ் நிலைய பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மக்கய் அவதி
