குடத்துக்குள் தலையைவிட்ட நாய் எடுக்க முடியாமல் பெருந்தவிப்பு தவித்தபோது தீயணைப்புப் படையினர் வந்து மீட்டுத்த சம்பவம் திருச்சியில் இடம்பெற்றுள்ளது.
குடத்துக்குள் சிக்கிக்கொண்ட தெரு நாயின் தலைக்குப் பாதிப்பில்லாமல், குடத்தை இலாவகமாக மீட்டெடுத்த தீயணைப்பு வீரர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
திருச்சி மாவட்டம், வெள்ளைபூலாம்பட்டியில் ஒரு வீட்டின் முன்பு குடத்தில் சிறிதளவே தண்ணீர் இருப்பதை கண்ட தெருநாய் ஒன்று, அதனைக் குடிப்பதற்காகத் தலையைக் குடத்திற்குள் நுழைத்தது.
அப்போது குடத்திற்குள் தலை இறுக்கமாகச் சிக்கிக்கொண்டது. தலையில் குடத்துடன் ஊர் முழுதும் நாய் சுற்றித் திரிந்தது கண்டு. பரிதவித்த மக்கள் எவ்வளவோ முயற்சித்தும் குடத்தை மீட்க முடியவில்லை.
பின்னர் நாயை ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டுத் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.அவர்கள் வந்து எந்த உபகரணங்களும் பயன்படுத்தாமல், நாயின் தலையை இலாவகமாக மீட்டுள்ளதாக இன்று (09) காலை செய்தி வெளியாகியிருக்கிறது.
குடத்திலிருந்து விடுவித்துக்கொண்ட நாய் அங்குள்ளவர்களின் மேல் உரசி நன்றி தெரிவித்தமை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.
இதையும் படியுங்கள்: செப்டம்பர் முதல் தாய்மாமன் தங்க மோதிரம்
தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் தாகத்துடன் சுற்றித்திரியும் நாய்கள் எங்கு தண்ணீர் கிடந்தாலும் அதனை பருக தவறுவதில்லை.
வெள்ளைபூலாம்பட்டியில் ஒரு வீட்டின் முன்பு சில்வர் குடத்தில் சிறிதளவே தண்ணீர் இருப்பதை கண்ட தெருநாய் ஒன்று அதனை குடிப்பதற்காக தலையை குடத்திற்குள் நுழைத்தது. தண்ணீரை குடித்து முடித்ததும் மீண்டும் தலையை வெளியே எடுக்க முயன்றபோது முடியவில்லை.
குடத்துக்குள் நாயின் தலை வசமாக சிக்கிக்கொண்டது. குடத்துக்குள் தலையைவிட்ட நாய் குரைத்துக்கொண்டே குடத்துடன் அங்குமிங்கும் ஓடியபடி பரிதவித்தது.
இதைக்கண்டு பரிதாபப்பட்ட அப்பகுதியினர் நாயை பிடித்து குடத்தை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பொதுமக்களின் பலகட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
தண்ணீர் குடிப்பதற்காகக் குடத்துக்குள் தலையைவிட்ட நாய் பற்றி தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல்
இதனால் நாயை அப்படியே விட்டால் தெருக்களில் சுற்றித்திரிந்து அவதிப்படும் என்று கருதிய பொதுமக்கள், நாயை ஒரு மரத்தில் கட்டி வைத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நாயின் தலையில் சிக்கிய குடத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
குடத்தை வெல்டிங் எந்திரம் மூலம் துண்டித்தால் நாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் எந்தவித உபகரணமும் பயன்படுத்தாமல், சிறிதுநேர போராட்டத்துக்கு பின் நாயின் தலையில் சிக்கிய குடத்தை லாவகமாக எடுத்தனர்.
பத்திரமாக மீட்கப்பட்ட நாய் நன்றியுணர்வோடு அங்கிருந்தவர்களை உரசிக்கொண்டு வாலை ஆட்டியப்படி சென்றதாகத் ‘தினத்தந்தி’ செயதி வெளியிட்டுள்ளது.
நாயின் தலையில் சிக்கிய குடத்தை லாவகமாக எடுத்த தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். நாயின் தலையில் குடம் சிக்கியதும், அதனை மீட்கும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் செய்தியைப் படிக்கும் இலங்கை வாசகர்களுக்கு மாதனமுத்தாவின் கதை நினைவுக்கு வரலாம்.
அவர், கன்றுக்குட்டியின் கழுத்துடன் சிக்கிக்கொண்ட மண் கலயமொன்றை மீட்பதற்குக் கன்றுக் குட்டியின் கழுத்தை வெட்டச் சொல்வார்.
கழுத்து துண்டாடப்பட்டும் மண் குடத்தை மீட்க முடியாது போகும். அப்போது குடத்தை உடையுங்கள் என்பார்.
மாதனமுத்தாவின் கதை முட்டாள்களுக்கு உதாரணமாகச் சொல்லப்படும் கதை. இந்தச் செய்தியைப் படிக்க அவர் நினைவுதான் வருகிறது.
வி. அருள்செல்வன்
