கந்தகட்டி பாடசாலையில் உயர்தரம் பயில மாணவர் இன்று அனுமதிக்கப்பட்டனர்.
வத்/கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இன்றைய தினம் (06) 2028ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை உத்தியோகபூர்வமாக உள்வாங்கும் நிகழ்ச்சி அதிபர் சுமன் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கடந்த 2025/2026 காலப்பகுதியில் க.பொ.த சா/தர பரீட்சையில் தோற்றி அண்மையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட கந்தகட்டி பாடசாலையின் மாணவர்களுடன் வேறு பிரதேச பாடசாலைகளில் இருந்தும் மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.


இந்த வேளையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.இவ்வருடம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுத்த உயர்தர வகுப்பு, சாதாரண தரப் பாடஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
இப்பாடசாலை கடந்தகாலங்களில் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
