இரத்தினபுரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சபரகமுவை மாகாண கல்வி அமைச்சினால் ரூபாய் 24.60 மில்லியன் பெறுமதியான உபகரணத் தொகுதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட மாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன.
இரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில் சபரகமுவை மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தின, பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார ஆகியோரின் தலைமையில் திங்கள் (15) மாலை வைபவம் நடைபெற்றது.
இரத்தினபுரி மாவட்ட கல்வி வலய அலுவலகங்களின் கீழ் உள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளுக்குக் கணினி அமைப்புகள், திறன் பலகைகள் (Smart Panels), மடிக்கணினிகள்,மாணவர்களுக்கான மேசை-நாற்காலிகள் என்பன வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, வசந்த புஷ்பகுமார, ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் புஷ்பகுமார திசாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுணுஆரச்சி, திட்டமிடல் பணிப்பாளர் நெவில் குமாரகே, மாகாண கல்விப் பணிப்பாளர் புஷ்பகுமார டயஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்











