மஸகெலியா மறே தோட்ட வலத்தளை பிரிவில் சுமார் 70 வயது உடைய ராஜகோபால் மணி என்ற முதியவர் தனது வீட்டிற்கு விறகு சேகரிக்கச் சென்ற வேளையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என நேற்று மாலை (05) நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸசார், தோட்ட மக்கள் இணைந்து தேடுதல் நடத்தியபோது அவர் கிடைக்காத நிலையில், இன்று 6 ஆம் திகதி காலை மீண்டும் தேடுதல் நடத்தினர். அப்போது வலத்தளை பிவிற்கும் லக்சபானை தோட்ட முள்ளுகாமம் மேற் பிரிவிற்கும் இடையே உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் மரணித்த நிலையில் முதியவரைக் கண்டுபிடித்துள்ளனர்.
முதியவரின் சடலத்தைத் தோட்ட மக்களும் நல்லதண்ணி பொலிசாரும் இணைந்து தோட்ட பாரவூர்தி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
