பிரஜா சக்தி “கம் தஷக் வட்ட தஷக்” நிகழ்ச்சி – நுவரெலியா மாவட்டத்தின் 35 கிராம சேவை பிரிவுகளில் தொடங்கப்பட்டது.
பிரஜா சக்தி “கம் தஷக் வட்ட தஷக்” நிகழ்ச்சித் திட்டத்தின் நுவரெலியா மாவட்ட ஆரம்ப நிகழ்ச்சி நேற்று (02) காலை அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கினிகத்தேனை கிராம சேவை பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆடு வளர்ப்பு,உப உற்பத்தித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், கினிகத்தேனை கிராம சேவை பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 15 வறிய குடும்பங்களுக்குத் தேவையான கால்நடைகள், விலங்குகளுக்குத் தேவையான மருந்துகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது ஆடு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் அமித் புஷ்பகுமாராவுக்கு, ஆட்டுப் பால் பொருள்களைப் பதப்படுத்துவதற்கான தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். இத்திட்டம் முழுவதற்கும் ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய். 3 மில்லியன் ஆகும்.
இத்திட்டம் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதில் அம்பகமுவை பிரதேச சபையின் தலைவர் கபில நாகந்தலை, மக்கள் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் சாமில ரணசிங்கா, அம்பகமுவை பிரதேச செயலாளர் சாமில ஜெயசிங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், நுவரெலியா மாவட்டத்தின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 35 கிராம சேவா பிரிவுகளுக்காக, சமூக அபிவிருத்தி சபைகளால் அடையாளம் காணப்பட்ட, உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு,வாழ்வாதாரங்களின் அபிவிருத்திக்கு நேரடியாகப் பங்களிக்கும் 36 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூபாய். 58.3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


