ஹொரணை, பட்டகொடை, கல்பாத்தை பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில் 44 பேர் இதுவரையில் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இன்று (03) மாலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காகக் கல்பாத்தை, ஹொரணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்தத் தீ விபத்தில் மேலும் 11 பேர் தீக்குள் சிக்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காகவும் தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
