மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி அன்னதானம் இன்று (29) வழங்கப்பட்டது.
இன்று (29) மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் முன்பாக வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையும் மஸ்கெலியா ஐக்கிய நலன்புரி வர்த்தக சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த அன்னதானம் வழங்கப்பட்டது.
வைபவத்தில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் மத குரு, மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய பிரதம குரு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வி, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக், உறுப்பினர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ். ராஜவீரன், இலங்கை வங்கி முகாமையாளர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிசார், இறக்காடு அதிரடி படையின் தளபதி, சிப்பாய்கள், அம்பகமுவை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளருமான கணபதி நகுலேஸ்வரன் உட்பட வர்த்தக சங்கத்தின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்



