குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் நால்வரும் ஆண்கள் இருவருமாக அறுவர் மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதி!
மஸ்கெலியா சாமிமலை கவரவலை தோட்ட 200 ஏக்கர் பிரிவில் இன்று காலை 8.30 அளவில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்களும் ஆண்களுமாக 15 பேரில் அறுவர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்பதுபேர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று காலை முதல் சற்று வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக தேயிலைச் செடிகள் கீழ்ப் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு கலைந்து கொட்டியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
