கம்பளையில் நேற்று பெய்த கனமழை காரணமாக பாடசாலை கட்டடத்தின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது. கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையான சாஹிரா கல்லூரியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் பாடசாலையின் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. இச் சம்பவம் நேற்று மே 24 இரவு இடம்பெற்றுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்
கௌசல்யா
