பாடசாலை சிறுமியைச் சீரழித்த சந்தேக நபருக்கு எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி வரை விளக்க மறியல் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று மே 25 நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வறும் 02.06.2026 வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் கே. ஜீ. புத்திக்க ஹசானி தர்மதாச உத்தரவிட்டார்.
பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய வயதில், பக்கத்து வீட்டுச் சிறுமியின் வாழ்க்கையைச் சீரழித்த இந்த மிருகத்தை லிந்துலை பொலிஸார் மே 22 அதிரடியாகக் கைது செய்தனர்.
லிந்துலையில் தோட்டமொன்றில் நடந்த இந்தக் கொடூரம் ஆசிரியரின் சாதுரியத்தால் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்தப் 13 வயது சிறுமி தற்போது இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது! மேலதிக விசாரணைக்காக அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி (JMO) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்தது பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் அதே தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த 40 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை!
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்ய வேண்டும் என்றும் இதுபோன்ற மிருகங்களுக்கு உச்சகட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன
கௌசல்யா
