ஹற்றன் திக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவை பெற்றஸோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் இன்று மே 23 கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவர் பதுளையைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வயோதிப தம்பதியரை 21ஆம் திகதி கொலை செய்துவிட்டு உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில், பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவைப் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கொழும்பு பகுதியில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்த கெம்பியன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொடு தொடர்பு வைத்திருந்து அப்பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தபோதே கைது செய்யப்பட்டார்
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கௌசல்யா
