அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டுக்கான எல்.வி. ஜயவீரா ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்து இம்முறை 10 மாணவர்களும் 04 மாணவிகளும் கலந்துகொண்டனர்.
இதில் கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக 03 மாணவிகள் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களின் இந்த வெற்றி பாடசாலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைகிறது.
இந்த வெற்றிக்குக் கடுமையாக உழைத்த மாணவிகளுக்கும் பயிற்சி வழங்கிய குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆசிரியர் செபஸ்டியன் அவர்களுக்கும் பாராட்டுகள். இந்தப் போட்டி நாவலப்பிட்டி ஜயதிலக்கா விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் மே 18 முதல் 23 வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
