வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி பகுதிக்கு விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்துக்குள் வீழ்ந் துள்ளது.
இன்று ஏப்பிறல் 25 இடம்பெற்ற இந்த விபத்தில் ஓட்டுநரும் உதவியாளரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்தில் விறகு லொறி இரண்டாகப் பிளந்துள்ளது.
