புத்தாண்டு விடுமுறைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு விசேட பஸ் சேவைகள் நடத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் ஹற்றனில் மாற்றாந்தாய் மனப்பான்மை போக்குடனேயே சேவை நடைபெறுவதாகப் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஹட்டன் அரச, தனியார் பேருந்துகள் முறையாக பணியில் ஈடுபடாத நிலையில் பாரிய அளவிலான பயணிகள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
குறிப்பாக தித்துவா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகளில் தடை ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் போக்குவரத்து வசதிகளை முறையாக செய்து கொள்ள முடியாது உள்ளனர்.
சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் முன் வைந்து அதிகளவில் பேருந்துகள் சேவையில் ஈடு படுத்த வேண்டும் என பயணிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
மேலும் ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு மேலதிகமாக புதிய அரச பேருந்துகள் குறைந்த பட்சம் 20 வழங்க வேண்டும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


