மலையகத்தில் தற்பொழுது கடுமையான வெப்பம் நிலவுவததால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.அதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் வற்றிப் போயுள்ள நீர்நிலைகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கண்டி – விக்டோரியா நீரேந்துப் பகுதியில் சோளம் பயிரிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
பிரதேச மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைத் தொடர்வதற்காக இத்தகைய மாற்று முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீரேந்துப் பிரதேசங்களில் பொதுமக்கள் நீராடி மகிழ்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. கண்டி திகனை ஒருத்தொட்டப் பகுதியில் உள்ள ஹுலுகங்க ஆறு நீரேந்தும் பகுதியுடன் இணையும் இடத்தில், பொதுமக்கள் நீராடி மகிழ்வதை இந்தப் படங்களில் காணலாம்.
மேலும், பல்வேறு பிரதேசங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அதிக வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்



