கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (02) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொகவந்தலாவ, நானுஓயா, பட்டிப்பொல ஆகிய பிரதேசங்களில், மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நால்வருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று வியாழக்கிழமை (02) தீர்ப்பை வழங்கினார்.
1998-ஆம் ஆண்டில் நானுஓயா பொலிஸ் பிரிவில் நிகழ்ந்த கொலைக்காக 47 வயதுடைய ஒருவர், 2019-ஆம் ஆண்டில் பட்டிப்பொலவில் தனது தாய், மனைவி, குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 55 வயதுடைய ஒருவர், 1990-ஆம் ஆண்டில் பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 64 வயதுடைய, 62 வயதுடைய இருவர் அடங்கலாக நால்வர் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்புக்கு ஆளாகினர்.
கௌசல்யா
