மலைகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை வேளையில் கடும் மழை பெய்துள்ளது. சில இடங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன
போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதோடு தாழ் நிலப்பகுதிகளில் நீர் தேக்கம் காணப்படுகிறது மக்கள் அவதானமாக இயங்குமாறும், குறிப்பாக மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழ்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும். பொலிஸாரால் அறிவுறுத்தப்படுகின்றனர்.
புசல்லாவை, கண்டி,பேராதனை, மாத்தளை, மடவளை, வத்தேகம, உக்குவலை, பன்விலை, கபரகலை, நெல்லிமலை, கோமரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது
திடீர் மழை காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
