கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு இறம்படை பகுதியில் சட்ட விரோத மதுபானம் (கசிப்பு ) தயாரிக்கும் தகவலை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 3 பொலிஸார் 1990 சுவசரிய அம்புலன்ஸ் மூலம் நுவரலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதனையடுத்து மேலும் 4 பேரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுள் இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு எஞ்சிய 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவிக் கூடு தானாகக் கலைந்ததா அல்லது களைக்கப்பட்டதா? என்பது பற்றிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
