மலையகத் தோட்டங்களில் கடமை புரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெரியவருகிறது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இணைந்து வழங்குவதாகக் கூறப்பட்ட சம்பளவுயர்வு தோட்டங்களில் கடமைபுரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு உரிய முறையில் வழங்கபப்டுவதில்லையெனத் தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் சார்பாக கடந்த வருடம் சனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கமைய தோட்டத்தில் கடமைபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும்; அரசாங்கத்தின் சார்பாக தலா இருநூறு ரூபாயும் தோட்ட கம்பனிகள் சார்பாக தலா இருநூறு ரூபாயும் சேர்த்து மொத்த சம்பளமாக நாளொன்றுக்கு 1750 ரூபாய் வழங்குவதாக கூறப்பட்டது
அதற்கமைய நிரந்தரமாகத் தோட்டத்தில் கடமைபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் இதுவரை அச்சம்பள உயர்வு நிரந்தமற்ற, தற்காலிக தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனத் தெரியவந்துள்ளது.
காலை முதல் மாலை வரை மழையிலும் வெயிலிலும் கஸட்டப்பட்டு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஈடாக கடமைபுரியும் தமக்கு ஏன் இந்த சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை என்பது புரியாதுள்ளதாகத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அநேகமான தோட்ட நிருவாகங்கள் எம்மை நிரந்தரத் தொழிலாளர்களாக உள்வாங்க மறுத்து வருகின்றன. தற்காலிக தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக உள்வாங்கினால் ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கை பொறுப:பு நிதியம் உள்ளிட்ட பல சலுகைகளைத் தோட்ட நிருவாகங்களினால் வழங்கப்பட வேண்டி வரும். அதனால், எம்மை நிரந்தரத் தொழிலாளர்களாகப் பதிவு செய்ய தோட்ட நிருவாகங்கள் மறுப்பு தெரிவித்து வருவதாகத் தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
இது குறித்து இ.தொ. கா உப தலைவர் சின்னையா ராஜமணி கருத்து தெரிவிக்கையில் நிரந்தர தோட்டத்தொழிலாளர்களைப் போல் சமமாக நாளொன்றுக்கு 8 மணித்தியாலயங்கள் இவர்களும் கடமை புரிகின்றனர்.
எனவே நிரந்தமற்ற தற்காலிகத் தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். இது குறித்து தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்த போதிலும் அவர்கள் உரிய பதிலை எமக்கு வழங்கவில்லை.
இது குறித்து தொழில் ஆணையாளருக்கு முறைப்பாடு செயய்பப்ட்டுள்ளது என்று தெரிவித்த அவர், கூடிய விரைவில் அவர்கள் சாதகமான பதிலைத் தருவார்களென எதிர்பார்பப்;தாகக் கூறினார்.
இரத்தினபுரி நிருபர் எஸ் ஆர். இரவீந்திரன்
