கேகாலையிலிருந்து மகோகனி மரப்பலகைகளைச் சட்ட விரோதமாகக் கொண்டு வந்ததாகக் கூறி அவற்றை ஹற்றன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
போக்குவரவு அனுமதிப் பத்திரம் இன்றிச் சட்டவிரோதமாக பருத்தி, பஞ்சு ஆகியவற்றால் மூடப்பட்ட நிலையில் அந்த மகோகனி மரப் பலகை கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதே பொலிசாரும் வனத்துறை அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர்.
ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் அகியோர் அடங்கிய குழுவால் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
மஸ்கெலியா நிருபர்


