நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பு முற்றாக எரிந்து சாம்பரானது.
இதனால் வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் தீயினால் எரிந்து நாசமானது. பாதிக்கபட்ட அந்த குடியிருப்பில் வசித்த ஐவர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.
இத் தீப் பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலீசார் முன்னெடுத்து வருவதாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

