மத்திய மாகாணம் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலை அதிபர் திருமதி மஞ்சுளா சந்திரசேகரம்பிள்ளை அதிபர் சேவையிலிருந்து 13.03.2026 ஓய்வு பெறுகிறார்
இதனை முன்னிட்டு பாடசாலையில் பிரியாவிடை வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கத்தை அலங்கரித்தன. உப அதிபர் வீரசிங்கம் ஜெயகுமார் உரையாற்றினார். ஓய்வு பெறும் அதிபர் திருமதி மஞ்சுளா சந்திரசேகரம்பிள்ளை ஏற்புரை வழங்கினார்.
பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாணவர்களெனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்












