பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக
குணதாச சமரசிங்க இன்று (12) பதவியேற்றார்.
அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதி பணிக்குழாமின் தலைவராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் குணதாச சமரசிங்க பதவி ஏற்றுக்கொண்டார்.
இவர் கல்வி உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பதவி வகித்ததுடன் கடந்த காலங்களில் பெருந்தோட்ட அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற் திட்டங்களின்போது அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்ற குணதாச சமரசிங்க ,பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை இன்றைய தினம் (12/03) அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

