பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் 4 ஆவது தொகுதி ஆசிரியர்கள் தமது கல்விச் சேவையில் கால் நூற்றாண்டு நிறைவு விழாவை இன்று (01.02.2026) ஹட்டனில் கொண்டாடுகின்றனர்.
பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் 1997 – 2000 ஆண்டுகளில் தமது ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து 2001.02.19 ஆம் திகதி ஆசிரிய நியமனத்தைப் பெற்றுக்கொண்டு 2026.02.19 ஆம் திகதியுடன் தமது 25 வருட கல்விச் சேவையினை பூர்த்தி செய்த சுமார் 200 ஆசிரியர்கள் தமது பணி நிறைவினை வெற்றிகரமாக கொண்டாடுகின்றனர்.
ஹட்டன் Ajantha Guests வரவேற்பு மண்டபத்தில் இன்று 01காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் நிகழ்வில் கலாநிதி பட்டங்கள் பெற்றவர்கள் ,கல்வியியலாளர் சேவையில் இணைந்தவர்கள்,அதிபர்கள்என பல்வேறு சாதனைகளை மலையகக் கல்வித் துறைக்காக படைத்தவர்கள் பாராட்டி கௌரவிக்கப்படுவதோடு கலை நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் P.ஹரிஹரன் தெரிவித்தார்.
ஹட்டன் MARANATHA CHILDREN HOME 124/3 Nursing home Road Hatton சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்களின் பயன்பாட்டிற்காக உணவுப் பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் கையளிக்கவுள்ளனர்.
தம்மை ஆளாக்கி மலையக கல்விப் புலத்திற்கு சேவை செய்ய வழி காட்டிய சகல ஆரம்பக் கல்வி மற்றும் இடை நிலைக் கல்வி உயர் கல்வி ஆசிரியர்கள் ,கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சகலருக்கும் தமது நன்றியை 4 ஆம் தொகுதி ஆசிரியர்கள் காணிக்கையாக்குகிறார்கள்.
பனவிலை நிருபர் ம. நவநீதன்
